சென்னை பாந்தியன் சாலையின் இணைப்பில் அமைந்துள்ள ஆதித்தனார் சிலையை போக்குவரத்து நெரிசல் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மறைந்த தினத்தந்தி குழுமத்தின் அதிபர் ஆதித்தனாரின் நினைவாக 1987ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சென்னை பாந்தியன் சாலை இணைப்பு ரோட்டில் சிலை திறந்துவைத்தார். அவரது சிலை அமைந்துள்ள சாலைக்கு ஆதித்தனார் சாலை என்றும் பெயரிடப்பட்டது. எழும்பூர் செல்ல முக்கிய வழித்தடமாக உள்ள இந்த சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது.
இதை சமாளிக்கு விதமாக, அந்த பகுதி சாலையை விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக அங்குள்ள அதித்தனார் சிலையை அகற்றி மாற்று இடத்தில் நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆதித்தனார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
No comments:
Write comments