அமெரிக்காவிற்குள் இஸ்லாமியர்கள் குடியேறுவதையும், வெளிநாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களையும் அமெரிக்காவில் நுழையவிடக்கூடாது என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டெனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பிரபல தொழில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை வெளியிட்டுவருவதாக உலகம் முழுவதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் பிரச்சார துவக்கத்தில் அமெரிக்காவிற்குள் இஸ்லாமியர்களை அனுமதிக்கக்கூடாது என்று பேசியிருந்தார். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புளோரிடா மாகாணத்தின் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடி நடந்த விவகாரத்தில் 50ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து மீண்டும் முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று பேசியுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு தற்போதையை அதிபர் ஒபாமா மற்றும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனையும் சரமாரியாக தாக்கி பேசினார். டிரம்பின் இந்த பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. அமெரிக்காவின் கவுரவத்தை உலக அரங்கில் டிரம்ப் தலைகுனிய வைக்கிறார் என்றும் அவரது இந்த பேச்சு அமெரிக்க மக்களிடையே தேவையில்லாத மோதல்களை உருவாக்கும் செயலாகும் என டிரம்பிற்கு எதிராக கருத்துக்கள் வலுத்து வருகிறது.
No comments:
Write comments