அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ பகுதியில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கென பிரத்யேகமாக கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணி அளவில் இந்த விடுதிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவன் சரமாரியாக அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டதில் 50ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயம் அடைந்தனர். சம்பவத்தை கேள்விப்பட்டதும் உடனே அங்கு விரைந்த காவல்துறையினர் குற்றவாளியை சுட்டு கொலை செய்தனர்.
பின்னர் குற்றவாளி தொடர்பாக நடந்த விசாரணையில் ஆப்கான் வம்சாவழியைச்சேர்ந்த ஒமர் மத்தீன் என்பவன் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகவும், அவனுக்கு ஐ.எஸ் அமைப்போடு தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. ஒமர் மத்தீனின் தந்தை இதை முற்றிலுமாக மறுத்து தனது மகனுக்கு எந்த தீவிரவாத அமைப்போடும் தொடர்பு கிடையாது எனவும், அவனுக்கு ஓரினச்சேர்க்கையாளர்களை பிடிக்காது அதனால் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக முன்னுக்கு பின் முரணணான பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. ஐ.எஸ் அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பேற்றுள்ளதாகவும், தங்களது அமைப்பின் உறுப்பினர் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியதுள்ளதாக செய்திகள் வெளியாகியது. பின்னர் ஒமரின் தந்தை தீவிர தாலிபான் ஆதரவாளர் என்றும், ஓமரும் ஒரு ஓரினச்சேர்கையாளர் தான என அவரது முன்னால் மனைவி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும்போது தனது நாட்டின் காவல்துறை எஃப்.பி.ஐ தெரிவித்துள்ள தகவலின் படி இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பின் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும், தாக்குதலை நடத்திய ஓமர் மத்தீனுக்கு எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார். எனினும் இந்த தாக்குதலுக்கான நோக்கம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார். அப்போது எஃப்.பி.ஐயின் மூத்த அதிகாரி ஜேம்ஸ் கோமே உடனிருந்தார்.
No comments:
Write comments