சிரியா ஈராக் ஆகிய நாடுகளில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி உலகம் முழுவதும் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை ஐ.எஸ் அமைப்பு நடத்தியுள்ளது. இவ்வமைப்பின் தலைவனான பக்தாதி கடந்த திங்கட்கிழமை சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை நடத்திய வான்வெளித்தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பக்தாதி வட சிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக துருக்கி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகளை வெளியிடும் அல்-அமாக் பத்திரிகயும் இதை உறுதி செய்துள்ளது.
அல்-அமாக் பத்திரிகையில் வெளிவந்து செய்தியை பார்க்கும்போது கடந்த ஞாயிற்றுகிழமை ரம்ஜான் மாதத்தின் 5ஆம் நாள் பாக்தாதி அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக அது கூறுகிறது. ஆனால் இது தொடர்பாக அமெரிக்க கூட்டுப்படையினரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அதே சமயம் ஈராக் நாட்டின் செய்தி நிறுவனம் அல்-சுமாரியா கூறும்போது ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தாக்குதலில் பாக்தாதி காயம் அடைந்துள்ளதாகவே தெரிவிக்கிறது.
No comments:
Write comments