படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா படத்தின் பாடல் சி.டியை வெளியிட்டார்.
படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதை அடுத்து படத்தின் பாடல்கள் மற்றும் டிரய்லர் பிரம்மாண்ட விழாவின் மூலம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் அமெரிக்க பயணத்தில் இருப்பதால் நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்தும் அதே நாளில் இணையதளத்தில் பாடல்கள் வெளியாகும் என கூறப்பட்டது, யாரும் எதிர்பாராத நிலையில் இன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.
படத்தை வெளியிடுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்துவருகிறது, ஜூலை மாத இறுதியில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் ஒரு வித்யாசமான தோற்றத்தில் திரைப்பட காட்சிகள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:
Write comments