ஷங்காய் நகரில் உள்ள புடோங் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சோதனைச் சாவடி அருகே இன்று பிற்பகல் 2 மணியளவில் திடீரென்று நடந்த குண்டுவிடுப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்த 3 பெரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், குண்டு வெடிப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து விமான நிலையப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:
Write comments