Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 11, 2016

ரகுராம் ராஜன் வைத்த குண்டு டிசம்பரில் வெடிக்கும் - சு.சாமி புதிய குற்றச்சாட்டு


மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் இந்திய நிதியமைப்பை சீர்குழைப்பதற்கு டைம் பாம் வைத்துள்ளதாகவும், அந்த டைம் பாம் வருகின்ற டிசம்பரில் வெடிக்கும் பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ வங்கியின் ஆளுனர் ரகுராம் ராஜன் மனதளவில் இந்தியராக செயல்படவில்லை, இந்திய பணமதிப்பு வீழ்ந்ததற்கு அவரே முக்கிய காரணம் எனவே அவரை உடனடியாக அப்பதவியை விட்டு நீக்க வேண்டும் என பிரமர் நரேந்திர மோடிக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி "ரகுராம் ராஜன் தனது பணியை சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்" என புகழாரம் சூட்டினார். மேலும் பல தரப்பிலிருந்தும் ரகுராம் ராஜனுக்கு பாராட்டுக்களே குவிந்தது.

சுப்பிரமணி சாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அனைத்தும் ஆதரமற்றது எனவும், ஒவ்வொருவரும் தனது நாட்டுப்பற்றை வெவ்வேறு வழிகளில் நீரூபிப்பார்கள், நானும் அதுபோலத்தான் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரகுராம் ராஜனை அப்பதவியில் இருந்து நீக்கியே தீர வேண்டும் என சு.சாமி தொடர்ந்து போர்கொடி தூக்கி வருகிறார். சமீபத்தில் தனது டுவிட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது, ரகுராம் ராஜன் இந்திய நிதி அமைப்பில் ஒரு டைம்பாம் வைத்துள்ளார், கடந்த 2013ஆம் ஆண்டிலேயே அது வைக்கப்பட்டுவிட்டதாகவும், வருகின்ற டிசம்பர் மாதம் அது வெடித்து இந்திய நிதி அமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சாமியின் இந்த புதிய கருத்தால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக ரகுராம் ராஜன் தொடர்வாரா என்பதை திட்டவட்டமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic