Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 26, 2016

நிர்வாகிகளின் நெருக்கடி, தேர்தல் தோல்வி - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜினாமா


தேர்தல் தோல்வி புகார், அதிருப்தி காரணமாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்விக்கு இளங்கோவன் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.

தோல்வி அடைந்த வேட்பாளர்கள் பலரும் டெல்லி சென்று மாநிலத் தலைவர் என்ற முறையில் இளங்கோவன் தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

இளங்கோவன் தனது இராஜினாமா கடிதத்தை 17ம் தேதியே அனுப்பி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது அடுத்த தலைவர் யார் என்ற பரபரப்பு காங்கிரஸ் கட்சியை தொற்றிக் கொண்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic