டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் ஆணையராக பணியாற்றி வந்தார். இவர் விருப்ப ஓய்வு கேட்டு மத்திய அரசிற்கு மனு அனுப்பி இருந்தார். அவருக்கு விருப்ப ஓய்வு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூலை 15ம் தேதி முதல் சுனிதாவுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த மனுவை பரிசீலித்து அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அவர் ஜூலை 15-தேதி முதல் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலுக்கு எதிராக தன்னை மத்திய அரசு பழிவாங்கலாம் என்ற அச்சத்தில் சுனிதா கெஜ்ரிவால் விருப்ப ஓய்வு பெற்று விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இவரது கணவர் கெஜ்ரிவாலும் ஐஆர்எஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments