சித்தூர் சிறையில் உள்ள 32 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
குப்பம் வந்திருந்த அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது, சித்தூர் மாவட்டத்தில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுகின்றன. அதை அனுமதிக்க இயலாது. கைதான 32 பேரும் அப்பாவிகள் அல்ல. அவர்கள் நல்லவர்கள் என்று நியாயப்படுத்த முடியாது.
செம்மரம் வெட்டி கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 32 தமிழர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை செய்ய இயலாது. இது பற்றி ஆந்திர அரசு தமிழக அரசுக்கு உரிய விளக்கத்தை அளிக்கும். செம்மரக் கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சந்திரபாபுநாயுடு கூறினார். முன்னர் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments