Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

சிறையில் இடம் இல்லாததால் 38,000 கைதிகள் விடுதலை!


அங்காரா: துருக்கி சிறையில் இடம் பற்றாக்குறையால் நிபந்தனையின் அடிப்படையில் 38 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு உத்திரவிட்டுள்ளது.

துருக்கியில் கடந்த ஒரு மாததிற்கு முன்பு ஏற்பட்ட திடீர் இராணுவ புரட்சியை மக்களின் ஆதரவுடன் முறியடித்தார் அந்நாட்டு அதிபர் எர்டகோன். இதனை தொடர்ந்து நட்டிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை ஒவ்வொருவராக வேட்டையாடி சிறையில் அடைத்து வருகிறது துருக்கி அரசு. இதில் நீதிபதிகள், இராணுவ வீரர்கள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் என அனைவரும் அடங்குவர்.

இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் சிறையில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இன்னமும் கிளர்ச்சியாளர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருப்பதால் சிறையில் கைதிகளை அடைத்து வைக்க போதிய இடமில்லை என்ற காரணத்தினால் மற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்று வரும் கைதிகளை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய அந்நாட்டு  அரசு முடிவெடுத்துள்ளது. இதில் நன்னடத்தையின் காரணமாக பல்வேறு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஆனால் கொலை குற்றங்கள், வன்முறைகள், பாலியல் தொடர்பான குற்றங்கள், அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய இயலாது என தெரிவித்துவிட்டது.

இதனை தொடர்ந்து 38 ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள் என அந்நாட்டு நீதிபதி பேகிர் போஜ்தக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது மன்னிப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட விடுதலை அல்ல மாறாக நிபந்தனையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic