டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த அணிக்கான புதிய ரேங் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
முன்னதாக் முதலிடத்தில் இருந்து வந்த ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியுடன் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் அந்த அணி பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து இந்திய அணி டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டுதான் டெஸ்ட் தர வரிசை முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகப்படுத்தியது. அன்றிலிருந்து இன்று வரை பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். இந்திய அணி முதலிடத்தை தக்க்வைத்துக்கொள்ளவேண்டுமானால் நாளை துவங்க உள்ள மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி முதல் இடத்திற்கு முன்னேறிவிடும்.

No comments:
Write comments