சில அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி பட்டவர்கள் என்றால் தான் விமர்சிக்கப்படும்போதோ அல்லது தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழும்போதோ அதனை திசைதிருப்பவும், அக்குற்றச்சாட்டுகளின் மூலமாக ஆதாயம் அடைய முயற்சிப்பார்கள். அந்த வகையில் தலித் சமூகத்தை சேர்ந்த மாயாவதியை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த சசிகலா புஷ்பாவும் அதே போன்ற ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
சமீபத்தில் உத்திரபிரதேச பா.ஜ.க துணைத்தலைவர் தயாசங்கர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரை கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். விபச்சாரியை விட மோசமானவர் மாயவதி என்று அவர் கூறியது கடும் கண்டனத்திற்குரியது என்றாலும், இதனை முற்றிலுமாக தனக்கு சாதகமாக்கிக்கொண்டு ஒட்டு மொத்த தலித் பெண்களையே கேவலப்படுத்தியது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தினார்.
தற்போது தமிழகத்திலும் மாநிலங்களவை எம்.பியாக இருக்கும் சசிகலா புஷ்பாவும் இதே வழிமுறையை கையாண்டு வருகிறார். சசிகலா புஷ்பா தொடர்பான சர்ச்சை, அவரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் அவருக்கு எதிரான புகார்கள், குற்றச்சாட்டுக்கள் அடுக்கடுக்காக வந்த கொண்டே இருக்கிறது. தான் விமர்சிக்கப்படும்போதும் தன் மீது குற்றஞ்சாட்டும்போது பாதுகாப்பு கேடையத்திற்காக தான் சார்ந்த சமூகத்தை இழுத்துள்ளார் சசிகலா புஷ்பா.
இது தொடர்பாக அவர் கூறும்போது "என்னை கேவலப்படுத்துவது என் சமூகத்தை கேவலப்படுத்துவதற்கு சமம்" என தெரிவித்துள்ளார். சசிகலா புஷ்பா மீது குற்றஞ்சாட்டப்பட்டால் அவர் தனியாக நின்று போராடி தன்னை நிரபராதி என நிரூபிக்கட்டும், அதை விடுத்து சமூகத்தை பகடைக்காயாக பயன்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

No comments:
Write comments