Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

தலித் சிறுமிக்கு தண்ணீர் தர மறுத்த கோயில் பூஜாரிகள்



தலித் சிறுமிக்கு தண்ணீர் கொடுக்க மறுத்த கோயில் புஜாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள குன்னார் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி சுதா. இவர் தனது தந்தையுடன் வயலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு கடுமையான தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. தனது தந்தையிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து கோயிலுக்கு அருகில் உள்ள கை பம்பில் தண்ணீர் பிடித்து செல்ல கோயில் பூஜாரியிடம் அனுமதி கேட்டுள்ளனர். அப்போது கோயிலில் வேலை செய்து கொண்டிருந்த பூஜாரி தலித்கள் யாரும் இந்த பம்பில் தண்ணீர் குடிக்க கூடாது என்று சிறுமியின் தந்தையிடம் கடுமையாக கூறியுள்ளார். மேலும் தலித் இனத்தை சேர்ந்த உங்களுக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தின் போது அவ்விரு பூஜாரிகளும் அச்சிறுமியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த இரண்டு பூஜாரிகளையும் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic