அருணாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் கலிக்கோ புல் தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் முதலமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் வசித்துவந்த கலிக்கோ புல் அந்த வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பதவி பறிபோன பின்னரும் அவர் அவ்வீட்டைவிட்டு வெளியேறவில்லை. முதலமைச்சர் பதவி பறிபோனதிலிருந்து அவர் பெரும் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டில் தூக்கிட்டுக் கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அதிர்ச்சிகரமான இச்சம்பவத்தில் விஷமம் எதேனும் உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது.
அருணாசல பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கட்சியின் 30 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 26–ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் ஆதரவுடன் தங்கள் கோஷ்டியைச் சேர்ந்த கலிகோ புல்லை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர். இதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. கலிகோ புல் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வந்தது.
இதற்கிடையே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து நபம்துகி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அருணாசலபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது என்றும் மாநிலத்தில் நபம்துகி தலைமையிலான காங்கிரஸ் அரசே தொடரவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் முதலமைசராக பதவியேற்றுக் கொண்ட நபம்துகி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னதாக பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து கலிகோ புல் உள்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினர். காங்கிரஸின் 45 எம்.எல்.ஏ.க்களும் ஒன்று கூடி கட்சி மேலிடம் எடுத்த முடிவின்படி மறைந்த முதலமைச்சர் டோர்ஜி காண்டுவின் மகனான பிமாகாண்டுவை சட்டசபை கட்சி தலைவராக(முதலமைச்சராக) தேர்ந்தெடுத்தனர்.

No comments:
Write comments