Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 31, 2016

கோவா ஆர்.எஸ்.எஸ் தலைவர் அமைப்பிலிருந்து நீக்கம்!


அடுத்த ஆண்டு கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு பா.ஜ.கவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு அங்குள்ள கட்சிகள்  இப்போதே தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் கோவா மாநில  ஆர்.எஸ்.எஸ் தலைவர் வெலிங்கர், பாரதீய ஜனதா கோவா  மக்களின் நம்பிக்கையை பெற தவறிவிட்டது எனவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறுவது கடினம் என்றும் தெரிவித்து இருந்தார். அதேபோல், தான் நடத்தி வரும் பி.பி.எஸ்.எஸ் என்ற அமைப்பின் மூலமாக பா.ஜ.க   அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்.

அண்மையில் கோவா வந்த பா.ஜ.கவின் தேசிய  தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பட்டத்திலும் ஈடுபட்டார். இதையடுத்து, அமித்ஷா இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களிடம் எடுத்துச்சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில், தற்போது வெலிங்கரை நீக்கி ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வைத்யா தெரிவித்துளார்.  கோவா மாநிலத்தின் புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார்  என்ற முடிவும் இன்னும் எடுக்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic