Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 4, 2016

சசிகலா புஷ்பாவை அவரது கணவரே ஆதரிக்கவில்லை


தனது மனைவி சசிகலா புஷ்பா நாடகமாடுவதாகவும், முதல்வர் ஜெயலலிதா குறித்து அவர் சொன்ன விமர்சனங்கள் எதிலும் தனக்கு உடன்பாடில்லை என அவரது கணவர் லிங்கேஸ்வர திலகர் தெரிவித்துள்ளார்.

டெல்லி விமானநிலையத்தில்  திமுக எம்.பி திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்திருக்கிறார் அதிமுக எம்.எல்.ஏ சசிகலா புஷ்பா. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு சசிகலா புஷ்பா அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு மாநிலங்களைவையில் பேசிய சசிகலா புஷ்பா தான் ஆத்திரத்தில் திருச்சி சிவாவை அடித்துவிட்டதாகவும், அதற்காக தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிவித்தார். தன்னை ஜெயலலிதா கன்னத்தில் அறைந்ததாகவும், பதவியை விட்டு விலகுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர், தனது உயிருக்கு பாதுகாப்பில்லை, அரசு பாதுகாப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.


தன்னை போயஸ் கார்டனில் நாயைப்போல நடத்தியதாகவும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறினார். இது தொடர்பாக சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் கூறும்போது தனது மனைவி நாடகமாடுவதாகவும், அவர் கூறுவதில் எந்த உண்மயும் இல்லை என பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். தனது கணவரிடத்திலிருந்தே தனக்கு ஆதரவு இல்லை என்பதை அறிந்த கொண்டு சசிகலா புஷ்பா நொந்துபோயுள்ளார். விரைவில் காங்கிரஸ் அல்லது திமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic