இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியேற்றக்கூடாது என்ற வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்தானது அவரது அரசியல் நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாலர் ஞானசாரா தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார். வடக்குமாகாண முதலமைச்சர் நாட்டின் அரசியல் அமைப்பை மதித்து செயல்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கிலும், கிழக்கிலும் சிங்களவர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பெரும்பான்மை சமூகமாக இருக்கின்ற சிங்கள சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளமுடியாத தேவையற கதைகளை பரப்பி வருகிறார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் சட்டம் இருக்கின்றது. அதனை சிங்கள மக்கள் அல்லத் சிங்கல தலைவர்கள் மாத்திரமா மதித்து நடக்க வேண்டும்? விக்னேஸ்வரனின் நிலைபாடு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. தமிழ் மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியாக அவர் இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். வடக்கில் சிங்களவர்களை குடியேற்றினால் அது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகும் என்கிறார். வடக்கிலிருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்கிறார்.
மொரகஹாகந்த் நீர்பாசனை திட்டத்தில் தண்ணீருக்கான உரிமையை பெறவேண்டும். இவ்வாறு பல விஷயங்களை அவர் கூறி வருகின்றார். நாட்டின் தென் பகுதியோ அல்லது கொழும்பையோ அறிந்திராத ஒருவரைப்போலவே அவர் பல இட்டுகட்டப்பட்ட கதைகளை பரப்பி வருகிறார். வடக்கில் உருவாகியிருக்கும் இவ்வாறான இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும், இவ்வாறு ஞானசாரா தெரிவித்துள்ளார்.
அதே போன்று வெளிமாவட்ட மக்களை வடக்கு மாகாணத்தில் குடியேற்றுவதால் தமிழ் மக்களின் தனித்துவம் பாதிக்கப்படுமென விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 29ஆம் தேதி கன்னடா நாட்டைச்சேர்ந்த வெளியுறுவுத்துறை அமைச்சர் தமது அலுவலகத்தில் சந்தித்த விக்னேஸ்வரன் பின்னர் பத்திரிகையாளர்களிடத்தில் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments