Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 31, 2016

பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும்!




பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான சட்டம்போல் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். காரணம் இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் மத்திய பிரதேசமும் யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதலிடமும் வகிக்கிறது.

கடந்த 2015ஆம் வருடம் மட்டும் மொத்தம் 34,651 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட 33,098 நபர்கள் தன் உறவினர்களாலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தேசிய குற்றவியல் புலனாய்வு அறிக்கையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது. 

பாதிக்கப்பட்டவர்கள் வயது வரம்பை பார்கும்போது 6 வயதுக்கு குறைவானவர்களிலிருந்து 60 வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 4391 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளது. தலைநகரமான டெல்லியில் 2199 வழக்குகள் பதிவாகியுள்ளது.

ஒவ்வொருவருடமும் சராசரியாக நாட்டில் 3.27 லட்சம் வழக்குகள் பதிவு செய்யபப்டுகிறது. அதில் 1.4 லட்சம் வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவை. இதில் கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்ச்சி, பெண்கள் மீதான தாக்குதல், ஈவ்டீசிங் போன்றவைகளும் அடங்கும்.

கற்பழிப்பு வழக்கை பொறுத்தவரை மகராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 4144 வழக்குகள் பதிவாகியுள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் 3644 வழக்குகள், உத்திரபிரதேசத்தில் 3025 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது. மற்ற மாநிலங்களில் பதிவாகியிருக்கும் வழக்குகளின் முறையே, ஒடிசா (2251), அஸ்ஸாம்(1733), சத்திஸ்கர் (1560), கேரளா(1256), மேற்கு வங்காளம் (1129), ஹரியானா(1070), பீஹார்(1041) ஆகும்.

யூனியன் பிரதேசங்களில் பதிவாகியிருக்கும் வழக்குகளின் முறையே, சண்டிகர்(72), அந்தமான்& நிகோபர்(36), தாதர் மற்றும் நாகர் ஹேவ்லி(8), தாமன் & டையு(5), புதுச்சேரி(3). இதில் லக்சதீப்பில் மட்டும் எந்த ஒரு பாலியல் குற்றமும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு எதிரனா பாலியல் வன்முறையில் மொத்தமாக பார்கும்போது மகாராஷ்டிரா(16989), மத்திய பிரதேசம்(12887), உத்திரபிரதேசம்(11343), ஒடிசா(9359), ராஜஸ்தான்(8873), மேற்குவங்கம்(8274), ஆந்திரம் (8049), தெலுங்கானா(6044) என பதிவாகியுள்ளது.

சத்தீஸ்கரில் (3500), குஜராத்(1743), பீஹார்(1738), கோவா(270), அஸ்ஸாம் (6636), திரிபுரா(609), மேகாலயா(231), அருணாச்சலபிரதேசம்(186), மிஜோரம்(141), மணிப்பூர்(133), நாகாலாந்து(53), சிக்கிம்(29) என பதிவாகியுள்ளது. பஞ்சாப்(2164), தமிழ்நாடு(1633), ஹிமாச்சல பிரதேசம்(737), உத்தர்கண்ட்(623) என்கிற ரீதியில் பதிவாகியிருக்கிறது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், பாலியல் கொடுமைகள் நடைபெற்று வந்தாலும், ஒரு நிர்பயா, ஒரு சுவாதி, ஒரு நந்தினி என்கிற ரீதியில் தான் பரபரப்பாக்கப்படுகிறது. பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் கூடிக்கொண்டே போவதற்கு வலுவில்லாத, உறுதியான சட்டங்களே காரணம் என பெருவாரியான மக்கள் உணருகிறார்கள். தீவிரவாதம், பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருப்பது போல பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கும் அது போன்ற சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்பு உண்டு!

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic