காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும் நடிகையுமான ரம்யா சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இம்முறை அவர் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்றைய தினம் மான்டியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த அவர் பேசும்போது "சிலர் என்னுடைய தேசப்பற்றை சந்தேகிக்கின்றனர். அவர்கள் சந்தேகித்துவிட்டு போகட்டும், அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர்களுக்கு நான் எந்த ரீதியிலும் உதவி செய்ய முடியாது. இந்திய சுதந்திர போராட்டத்தில் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் மற்றும் இன்ன தலைவர்கள் போராடிக்கொண்டிருக்கும்போது வெள்ளையர்களுடன் கைகோர்த்தவர்கள் தான் இந்த பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ். எஸ் அமைப்பினர். நமது நாட்டில் பல்வேறு மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் இருந்து வருகிறது. இருந்த போதிலும் மக்கள் சமூக நல்லிணக்கத்துடனேயே வாழ விரும்புகின்றனர். நாம் அனைவரையும் நேசித்து பழக வேண்டும். அதேபோன்று நமது நாட்டையும் நேசிக்க வேண்டும்" என பேசினார்.
முன்னதாக பாகிஸ்தான் குறித்து மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசிய நடிகை ரம்யா சர்ச்சையில் சிக்கினார். அவர் மங்களூர் வந்த போது பஜ்ரங்தள் அமைப்பினர் அவரது காரின் மீதி முட்டைகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க தலைவர் யுவா மோட்சா ரம்யாவின் மங்களூர் வருகையை எதிர்த்து ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments