மலேசியாவில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்த முயன்ற 3 ஐ.எஸ் பயங்கரவாதிகளை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை மலேசிய காவல்துறை அதிகாரி காலித் அபு பக்கர் கூறியதாவது " கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சிலாங்கர் மற்றும் பகாங் பகுதிகளில் தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்."
கைது செய்யபப்ட்டு மூவரும் மலேசியாவில் புகழ்பெற்ற முருகன் கோயில் மற்றும் பொழுதுபோக்கு மையம் மற்றும் காவல் நிலையங்கள் மீது மலேசியா நாட்டு சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்திவிட்டு சிரியா தப்பிச்செல்வதற்கான திட்டத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவர்களிடத்திலிருந்து கிரனேட் மற்றும் கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராதவாரு லாரி டிரைவர் போன்றும், கசாப்பு கடைக்காரன் போல வேலை செய்து வந்திருக்கின்றனர்.
காவல்துறை அதிகாரி காலித் மேலும் கூறியதாவது "இந்த தாக்குதலை நடத்த அவர்களுக்கு ஐ.எஸ் அமைப்பின் தலைமையிடத்திலிருந்து உத்தரவு வந்ததாகவும், இதனை நடத்தி முடிக்க மலேசியா நாட்டைச்சேர்ந்த முகமது வான்டி (தற்போது ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துவிட்ட) கட்டளையிட்டிருக்கிறான். இந்த முகமது வான்டி கடந்த ஜூன் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற தாக்குதலில் தொடர்புடையவன்" என தெரிவித்தார்.
மலேசியாவிலிருந்து வெளியேறி ஐ.எஸ் அமைப்பில் சேரவிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 68 மலேசியர்களின் பாஸ்போர்டுக்களை அந்நாட்டு அரசு இம்மாத துவக்கத்தில் பறிமுதல் செய்தது. சிரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சண்டையில் ஐ.எஸ் அமைப்பில் இணைந்த 18 மலேசியர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் 7 பேர் தற்கொலைத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments