Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 25, 2016

மும்பை மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் சூர்ய நமஸ்காரம் கட்டாயம்!


பா.ஜ.க - சிவசேனா கூட்டணியில் நடைபெற்ற வரும் ஆட்சியில் மும்பை மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் சூர்ய நமஸ்காரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

கடந்த செவ்வாய்கிழமை அன்று பிரிஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி) சார்பில் பொதுக்குழு கூட்டம் பா.ஜ.கவின் மாநகராட்சி மேயர் சமிதா காம்ப்ளே தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணவர்களின் ஆரோக்கியம் தொடர்பாக முக்கிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் யோகா வகுப்புகளை மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக்கக்கூடாது என வலியுறுத்தினர். அதே போன்று சூர்ய நமஸ்காரம் என்பதும் இந்துக்களின் வழிபாட்டு முறையாகும்.  இதனை மற்ற சமூகத்தினர் மீது திணிக்கக்கூடாது என சமாஜ்வாதி கட்சியின் வலியுறுத்தி வந்தனர். இவ்விரு கோரிக்கைகளையும் மாநகராட்சி பள்ளி நிர்வாகக் கூட்டம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

சூர்ய நமஸ்காரத்தை பள்ளிகளில் கட்டாயமாக்குவது என்பது இந்துத்துவா கொள்கைகளை ஊக்குவிப்பதாகும் என சமாஜ்வாதி கட்சியின் கவுன்சிலர் சேக் தெரிவித்துள்ளார். "இது போன்ற வழிபாடுகளை கட்டாயமாக்கப்படும்போது மற்ற மதத்தைச்சேர்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் சேர்க்க முன் வரமாட்டார்கள்" என அவர் தெரிவித்தார்.

இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இதை நாங்கள் முற்றிலுமாக எதிர்கிறோம் என காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் நசீம் கான் தெரிவித்துள்ளார்.  இது கல்வி முறையை காவிமயமாக்கும் திட்டம், இது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார். மாநகராட்சி தேர்தல்கள் நெருங்குவதை ஒட்டி தோல்வி பயத்தில் திசை திருப்பும் வேலையை பா.ஜ.க மற்றும் சிவசேனா இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது" என அவர் குற்றஞ்சாட்டினார். மும்பை மாநகராட்சியை கடந்த 20 வருடங்களாக‌ தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பா.ஜ.க சிவசேனா கூட்டணி ஏன் இத்துனை நாட்களாக மவுனமாக இருந்தார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பல முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் நசீம் கானை சந்தித்து மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தற்காக தங்களது நன்றியை தெரிவித்தனர். இஸ்லாமியர்கள், ஜெயின், கிறிஸ்தவர்கள், தலித்கள் என அனைவரும் இது தொடர்பாக கலங்கி போயுள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டு என தெரிவித்துள்ளனர்.

இதனை ஆதரித்து பேசிய பா.ஜ.க கவுன்சிலர் திலிப் படேல் கூறியதாவது, "சர்வதேசம் முழுவதும் யோகாவை சிறந்த உடற்பயிற்ச்சியாக கருதுகின்றனர். இதனை மதத்தோடு இணைத்து பேசி இதனை எதிர்கட்சிகள் அரசியலாக்குகின்றனர்" என தெரிவித்தார். மாநகராட்சியின் இந்த முடிவை ஆணையரான அஜெய் மேத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும்  என தெரிவித்துள்ளார்.

பி.எம்.சி. சார்பில் 1188 ஆரம்பப்பள்ளி, 49 இரண்டாம் நிலை பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 400 உருது மீடியம் பள்ளிகளும் அடங்கும். மொத்தம் 5.50 லட்சம் மாண மாணவிகள் இந்த பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic