Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 14, 2016

பயங்கரவாதத்தை தடுக்க அரபி, உருது, பார்சீ மொழிகளை கற்கும் என்.ஐ.ஏ அதிகாரிகள்


பயங்கரவாதிகளின் உரையாடல்களை கண்காணிக்க அரபி, உருது மற்றும் பாரசீக மொழிகளை கற்றுக்கொண்டிருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுறுவர்கள், தாக்குதல்கள் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கிழக்கு பிரதேசத்திலிருந்து ஹிஸ்புல் முஜாஜிஹிதேன் பங்களாதேஷி அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.

இத்தகைய பயங்கரவாத அமைப்புகள் தங்களின் தாக்குதல் திட்டத்திற்காக எழுத்து வடிவில் செய்திகளை பரிமாறும்போது அரபி, உருது மற்றும் பாரசீக மொழிகளையே பயன்படுத்தி வருகின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பிர்பும் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க தேசிய புலனாய்வு குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டபோது அதிக சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்த தாக்குதலுக்கு பிறகு நடத்திய விசாரணையின்போது நிறைய ஆவணங்கள் சிக்கியது. அவை அனைத்தும் பெரும்பாலும் அரபி, உருது மற்றும் பாரசீக மொழிகளிலேயே இருந்தது.

இனி இத்தகைய சிரமங்கள் ஏற்பட்டு விசாரணையில் தாமதமோ அல்லது இடைஞ்சல்களோ ஏற்பட்டுவிடாமல் இருக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் பிற மொழிகளின் அடிப்படைகளை கற்று வருவதாக என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: டி.ஓ.ஐ

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic