பசுகாவலர்களில் 80% பேர் சமூக விரோதிகள் என கூறிய பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த பசுகாவலர்களையும் அவமானபப்டுத்திவிட்டார் என வி.ஹெச்.பி தலைவர் பிரவீன் தொகாடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பசு தாய்க்காக தங்களது வாழ்க்கை முழுவதையும் அற்பணித்து அதனை பாதுகாப்பதற்காக அனுதினமும் உயிரை பணயம் வைத்து இந்துக்கள் காத்து வருகின்றனர். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அவர்களை சமூக விரோதிகள் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியது கடும் கண்டனத்திற்குரியது. இந்துக்களின் ஓட்டுக்களை பெற்றுக்கொண்டு அவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க பார்க்கிறார்கள் என பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது "மோடி பசு காவலர்களில் 80% பேர் சமூக விரோதிகள் என குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் அதனை ஆதரத்தோடு நிரூபிக்க வேண்டும். பசுக்களை கொலை செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கையாலாகத அரசாகவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது. பசுவை பாதுகாப்பதற்காக நடவடிக்கையில் இறங்கும் இந்துக்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க பார்க்கிறீர்களா? அதற்கு ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இந்துக்கள் எவறேனும் இவ்விவகாரத்தில் மாநில அரசுகளால் தொல்லைகளுக்கு ஆளானால் அவர்கள் தாராளமாக வி.ஹெச்.பி அமைப்பை தொடர்பு கொள்ளலாம். சட்டரீதியான அனைத்து உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என தொகாடியா தெரிவித்துள்ளார்.
பசுவை பாதுகாப்பதற்காக நாடு முழுவதும் சட்டம் இயற்றப்படவேண்டும். பசுக்களை கொல்வதும், அவற்றை லாரியில் கொண்டு செல்வதற்கும் தடைவிதிக்க வேண்டும், இது தவிற 24 மணி நேர புகார் மையமும் அமைக்கப்பட வேண்டும் என தொகாடியா கேட்டுக்கொண்டுள்ளார். அதே பொல கடந்த 4 ஆண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 44% அதிகரித்துள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும். ஏற்றுமதிக்காக வெட்டப்படும் எந்த மாடுகளும் பிளாஸ்டிக்கை திண்றதால் இறந்தது அல்ல என குறிப்பிட்டு பேசினார்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித்களுக்கு ஆதரவாகவும், பசு காவலர்களுக்கு எதிராகவும் மோடி கருத்து தெரிவித்ததால் இந்து அமைப்புகளே மோடிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments:
Write comments