தெலுங்கானா மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது "குஜராத்தில் நடைபெற்ற சம்பவத்தை ஒட்டுமொத்த தலித்களின் பிரச்சனையை போல் மாயாவதி ஆக்கிவிட்டார். நான் அந்த தலித்களை பார்த்து கேட்கிறேன். மாட்டை அறுத்து அதன் மாமிசத்தை உண்டுதான் வாழ வேண்டுமா? இது முற்றிலும் தவறானது. இந்த கேவலவான தலித்கள் செய்த தவறினால் நாட்டுப்பற்று கொண்ட, ஹிந்து தர்மத்தை கடைபிடிக்கின்ற, பசுவை வணங்குகின்ற தலித் சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார்கள்.
மாட்டிறைச்சிக்காக பசுவை கொன்றவர்களை தாக்கியவர்களுக்கு நான் முழு ஆதரவு அளிக்கின்றேன். அது சரியான செயல்தான். மாட்டுத்தோலை உரித்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டிய அனைவருக்கும் என வாழ்த்துக்கள்" இவ்வாறு தனது வீடியோவில் ராஜா சிங் பேசியுள்ளார். இரண்டரை நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவை கடந்த ஜூலை 30ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதுவரை 65,000 நபர்கள் இந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர். தெலுங்கானாவில் பசுபாதுகாப்பு நிகழ்ச்சிகளில் எண்ணற்ற தலித்கள் தன்னோடு பங்கெடுத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும், அதிலும் குறிப்பாக மாயாவதியை பார்த்து நான் கேட்கிறேன் "எதற்காக தலித்களை இவ்விவகாரத்தில் இழுத்துள்ளீர்கள்? நான் ஒவ்வொருவருக்கு சொல்லிக்கொள்ளவிரும்புவது என்னவென்றால் தலித் சமூகம் மட்டுமல்ல, மற்ற சமூகங்களான சத்ரியர்கள், யாதவர்கள் என யாராக இருந்தாலும் மாட்டை கொன்றால் இது போன்றே அவர்களுக்கும் தக்க பாடம் புகட்டப்படும். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.
பசுவை பாரத நாட்டின் தாயாக அறிவிக்கும்வரை பசு பாதுகாப்பிற்காக நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதுவரை நாங்கள் பொறுமையாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments