வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தல் போட்டியிடும் டொனால்ட் டிரம்பின் மூன்றாவது மனைவியான மெலியானாவின் இளம்வயது நிர்வாணபடத்த அந்நாட்டு பத்திர்கையான 'தி நியுயார்க் போஸ்ட்' வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டுகளில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தவர் மெலியானா. அப்போது அவருக்கு வயது 25. பிரான்சு நாட்டைச்சேர்ந்த ஏலே டி பேசவல்லி என்ற புகைப்பட கலைஞர் ஒருவருக்கு முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் மெலியானா. ஐரோப்பிய பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக மெலியானா இதுபொன்று போஸ் கொடுத்துள்ளார். ஆனால் பிரபல தொழிலதிபரான டொனால் டிரம்ப் கடந்த 2005 ஆம் ஆண்டு மெலியானாவை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதால் மெலியானாவும் முன்பை விட மிக பிரபலமாகிவிட, அவரது முந்தைய படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நியுயார்க் போஸ்ட் பத்திரிகை.
இது தொடர்பாக டொனால் டிரம்ப் கூறும்போது "மெலியானாவின் அந்த புகைப்படம் நாங்கள் இருவரும் சந்திப்பதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது. நான் அவரை முதன் முதலாக நியுயார்க் பேஷன் விருந்தில்தான் சந்தித்தேன். அந்த சந்திப்பிற்கு மூன்று வருடங்களுக்கு முன்பாகதான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர பேஷன் உலகில் இதுவெல்லாம் சர்வசாதாரணம். இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்திருக்கிறார்.

No comments:
Write comments