புதுடெல்லி: உலகின் எந்த சக்தியாலும் ஜம்மு கஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்க முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் ஜம்மு கஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதத்தில் எதிர்கட்சி அவைத்தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பினார். கஷ்மீர் மக்களின் பிரச்சனையை துப்பாக்கி முனையில் தீர்க்க முடியாது. அம்மக்களின் மனங்களை வெல்லவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ராஜ்னாத் சிங் கூறும்போது "உலகின் எந்த சக்தியாலும் கஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்க முடியாது. ஜம்மு கஷ்மீரில் நிலவும் பிரச்சனைக்கு பாகிஸ்தானே முக்கிய காரணம். அங்கு கலவரத்தை மறைமுகமாக பாகிஸ்தான் தூண்டிவருகிறது. கஷ்மீரில் அமைதி நிலை திரும்ப மாநில அரசுக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கலவரக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும்போது பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது. கஷ்மீர் கலவரம் தொடர்பாக ஆகஸ்ட் 12ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். எங்கள் இதையம் கஷ்மீர் தான். இதனை அம்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் கஷ்மீரில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற கோஷங்களை எழுப்பினால் பொறுத்துக்கொள்ள முடியாது" என ராஜ்னாத் சிங் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments