உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் கடந்த 2ஆம் தேதி வாரணாசியில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார். இந்தப் பேரணியில், சோனியா காந்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 12 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று வீடு திரும்பினார். மருத்துமனையைவிட்டு வீட்டுக்குச் சென்றாலும், முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் தேசியக் கொடியை சோனியா காந்தி ஏற்றுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் அவர் பேசுகையில், “சமீபகாலமாக நாம் பார்த்து வருவதுபோல் நம்முடைய சுதந்திரத்துக்கு சில இருட்டு சக்திகள் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது எல்லோருக்குமே பொதுவானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணியத்துடன் சுதந்திரமாக வாழும் உரிமையும், தனது கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையும் உள்ளது. நாட்டில் அச்சமின்றி வாழும் கவுரவமும், வெறுப்புணர்வு சார்ந்த சக்திகளால் நசுக்கப்படாமல் தங்களது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும் அனைவருக்கும் உண்டு. இந்த உரிமைகளை உள்ளடக்கிய சுதந்திரத்தை நமக்கு கஷ்டப்பட்டு பெற்றுத் தந்த தலைமுறையினர் இன்று நம்மிடையே இல்லை.
ஆனால், அவர்கள் அளித்துச் சென்ற அரிய பரிசான இந்திய அரசியலமைப்பு சட்டம் நம்மிடம் உள்ளது. நமது முன்னோர்கள் எதற்காக போராடினார்களோ, அந்த மதிப்புக்குரிய கொள்கைகள் இந்த அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகள் வீரமிக்க நமது இளைஞர்களைக் கொண்ட இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

No comments:
Write comments