Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 9, 2016

ஏமன் நாட்டின் மீது மீண்டும் சவுதி அரேபிய இராணுவம் தாக்குதல்


ஏமன் நாட்டின் எல்லையோர பகுதியில் சவூதி அரேபிய போர் விமானம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

சவுதி அரேபியாவிற்கு ஏமனில் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்களுக்கிடையே கடந்த சில மாதங்களாக போர் நிகழ்ந்து வருகிறது.
ஏமன் தலைநகர் சனாவின் அருகே சவூதி அரேபியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நேம் மாவட்டத்தில் உள்ள பல்பொருள் விற்பனை அங்காடி ஒன்றின் மீது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏமனில் இருந்து கிளர்ச்சியாளர்கள், போர் நிறுத்த விதிமுறைகளை மீறி, தங்கள் நாட்டு பகுதிகளில் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாக, சவூதி அரேபியா தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறது. அத்தகைய ஊடுருவல்காரர்களை எச்சரிக்கும் விதமாக, இந்த திடீர் போர் விமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சவூதி அரசின் இத்தகைய எதேச்சாதிகார செயல்பாடுகள் மேலும் தொடரும்பட்சத்தில், மீண்டும் ஏமன் வளைகுடாவில் போர் வெடிக்க வாய்ப்புள்ளதாக, சர்வதேச அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic