Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 11, 2016

ஜெர்மனியில் பொது இடங்களில் பர்தா அணிய தடை...?


பாதுகாப்பு கருதி பொது இடங்களில் பெண்கள் பர்தா அணிய தடைவிதிக்க ஆலோசனை செய்துவருவதாக ஜெர்மனி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் ஏஞ்சளா மேர்கல் தலைமையிலான அரசு பெண்கள் முழு முகத்தையும் மறைக்கும் வகையில் பர்தா அணிய தடைவிதிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் சமீபமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. எனவே பர்தாவை தடை செய்வதற்கான பரிந்துரையை உள்துறை அமைச்சர் தாமஸ் டிமரிஜேர் இன்று (வியாழக்கிழமை) அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மன் பத்திரிகையான 'தேகஸ்பீகள்' ல் கருத்து தெரிவித்துள்ள பெர்லின் மாநகர மேயர் பிரான்க் ஹென்கல் பர்தாவிற்கு தடை விதிக்கும் சட்டத்தினை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்த புதிய சட்டத்திருத்தத்தின் ஒரு பகுதியாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிவரும் இஸ்லாமிய மத போதகர்களுக்கும் தடைவிதிக்கப்போவதாக தெரிகிறது. கருத்துரிமையை எல்லா ரீதியிலும் அனுமதிக்க முடியாது. மிருகத்தனமான, வன்முறையை தூண்டும் விதத்தில் அமையும் பேச்சுக்களை கருத்துரிமை என்கிற ரீதியில் எடுத்துக்கொண்டு அதை அனுமதிக்க முடியாது. அமைதியான சூழல் ஏற்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை கூட்டுவதற்கும் உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்யும் என்று கூறப்படுகிறது. பொது இடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பர்தாவை தடை செய்யும் கருத்தை கிறிஸ்டியன் ஜனநாய கட்சியிம் எம்.பி ஜேன்ஸ் ஸ்பேன் தான் முதலில் தெரிவித்திருக்கிறார். அனைத்து விதமான பர்தாக்களை தடை செய்வதின் மூலம் உலகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒரு எச்சரிக்கை செய்தியாக இருக்கும். புர்கா இனி நமது நாட்டிற்கு தேவைப்படாது என மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம் ஜெர்மனியில் வாழும் இஸ்லாமியர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic