Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 1, 2016

ரஷிய அதிபரை கொலை செய்யப்போவதாக‌ ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல்

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பார்வை தற்போது ரஷ்யா பக்கம் திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக பல்வேறு பயங்கரவாத தாக்குத்ல்களை ஐ.எஸ் அமைப்பினர் அரங்கேற்றியுள்ளார்கள். இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

யூடியூபில் 9 நிமிட வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் தன்னுடைய முகத்தை மறைத்தவாரு ஒரு பயங்கரவாதி பேசுகிறார். அதில் அவன் கூறும்போது "புடின்! நாங்கள் ரஷ்யாவிற்கு வருவோம், வந்து உன்னை உனது வீட்டில் வைத்தே கொலை செய்வோம். என்னுடய சகோதரர்களே! ஜிஹாதிற்கு தயாராகுங்கள். அவர்களோடு சண்டையிட்டு அவர்களை கொலை செய்வோம்" என கூறியுள்ளான்.

எனினும் இந்த வீடியோவை பதிவு செய்திருப்பதும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்தான் என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த வீடியோவிற்கான லிங்க் முதலில் டெலிகிராம் மென்பொருள் வழியாகவே பரவியிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணம் என்ன என்பதை அந்த வீடியோவில் தெரிவிக்கபடவில்லை.

அதே சமயம் தற்போது ரஷ்யா அமெரிக்காவுடன் இணைந்து சிரியாவில் ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு எதிராக தங்களது இராணுவ பலத்தை அதிகரித்து வருவதால் ரஷ்யாவிற்கு எதிரான தங்களது திட்டம் குறித்து பயங்கரவாதிகள் வெளியிட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic