பாகிஸ்தான் நாடும் நரகமும் ஒன்றுதான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறும்போது "பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு எதிராக தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி தூண்டிவிடப்பட்டு இந்தியாவிற்குள் நுழைந்த 5 தீவிரவாதிகளை நமது இராணுவ வீரர்கள் நரகத்திற்கு அனுப்பி வைத்தனர். பாகிஸ்தானும் நரகமும் ஒன்றுதான்" என தெரிவித்துள்ளார்.
நேற்றைத தினம் எல்லை அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். யூரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இராணு வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசே முழு காரணம் என ஏற்கனவே மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. மக்களோடு மக்களாக இணைந்து வன்முறையை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தூண்டிவிடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தகவல் கிடைத்ததும் இராணுவ வீரர்கள் அங்கு சென்றபோது ஊடுருவிய தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். இந்திய இராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்த போது 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானிலிருந்து ஊடுருவலை தடுக்க கூடுதல் பாதுகாப்பிற்கு இராணுவ வீரர்கள் அமர்த்தப்படுவார்கள் என கே.கே ஷர்மா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஊடுறுவல்கள் அதிக அளவில் இருப்பதாகவும் இது வரை 8 பயங்கரவாதிகளை சுட்டு கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments