Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 11, 2016

கபாலி வெற்றிக்காக ஆட்டுக்குட்டி பலி - குவியும் கண்டனங்கள்


கபாலி திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடுவதாக கூறி ஆட்டுக்குட்டியை பலியிட்ட சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ரஜினிகாந்த நடித்து வெளியான திரைப்படம் கபாலி. உலகம் முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்ற இத்திரைப்படம் வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. படம் வெளியாகும் போது வழக்கமாக ரஜினியின் ரசிகர்கள் பட்டாசு, பால் அபிஷேகம் என்று கொண்டாட்டங்களை வெளிப்படுத்தினர்.

தற்போது படம் வெற்றிபெற்றதை அடுத்து அதனை கொண்டாடும் வகையில் ஆட்டுக்குட்டி ஒன்றை பலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியைச்சேர்ந்த லோகித் சந்திரன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இம்மாதிரியான செயல்களுக்கு எதிராக ரஜின் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். திருச்சியில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஆடு பலி கொடுக்கபப்ட்டதை அறிந்த பலரும் இந்த செயலும் ஃபேஸ்புக்கில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி சமூக வலைத்தளம் மூலமாக இது போன்ற காரியங்களில் தனது ரசிகர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். கபாலி திரைப்படத்தின் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் பறவையை ரஜினி திறந்துவிடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அது போல நிஜ வாழ்விலும் ரஜினி ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும், அதற்கு ரஜினி முன் வந்து ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக உள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic