முன்னாள் விடுதலை புலிகளை கொல்ல விஷ ஊசி போடப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் மறுவாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் 104 பேரின் மரணத்திற்கு அவர்களுக்கு மெல்ல மெல்ல சாகும் விதத்தில் விச ஊசி போடப்பட்டதே காரணம் என இலங்கையின் முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஊடகங்கள் குற்றஞ்சாடியுள்ளது.\
இது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் கூறும்போது "இலங்கையில் வடக்கு பகுதியில் தற்போது முகாமிட்டுள்ள அமெரிக்க விமானப்படை மருத்துவ குழுவினர் முன்னாள் விடுதலை புலிகள் தங்கியுள்ள முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பொய்யானது என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ருவான் விஜிவர்த்தனே தெரிவித்துள்ளார். அரசின் செய்தி தொடர்பாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான ரஜிதா சேன ரத்னேயும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை உள்ளூர் மருத்துவர்களே பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

No comments:
Write comments