சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி முதல் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.
இதற்கு முன் முதலிடத்தில் இருந்து வந்த ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 3 போட்டிகளிலும் இலங்கையிடம் தோல்வி அடைந்ததால் இரண்டாம் இடத்திலிருந்து இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. இருந்த போதிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கிடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. தோல்வியுற்றாலோ அல்லது போட்டியை டிரா செய்தாலோ புள்ளிகளின் அடிப்படையில் பாகிஸ்தான் அணி முதல் இடத்திற்கு முன்னேறிவிடும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கிடையேயான தொடரை வென்ற போதிலும் இறுதிப்போட்டி டிராவானதால் பாகிஸ்தா அணி புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை கைப்பற்றியது. இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி முதல் இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

No comments:
Write comments