Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 22, 2016

முதிலில் நீங்கள் 10 குழந்தைளை பெறுங்கள் - கெஜ்ரிவால்


முதலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 10 பிள்ளைகளை பெற்று நல்ல முறையில் வளர்த்துவிட்டு பின்னர் மற்ற இந்துக்களை அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வலியுறுத்தட்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் தங்கள் மக்கள் தொகையினை பெருக்குவதற்காக அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய சர்ச்சைக்குரிய பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக கண்டித்துள்ளது.

காலாவதியாகிப்போன கருத்துக்களை மோகன் பகவத் பேசி வருகிறார் எனவும், அவரது கருத்துக்களை முற்போக்கு சிந்தனை கொண்ட எந்த இந்துக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்துள்ளது. மற்ற மதத்தவர்களின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் ஒரே வழி என தெரிவித்துள்ளது.



இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறும்போது "முதலில் மோகன் பகவத் 10 குழந்தைகளுக்கு அப்பாவாக மாறவேண்டும். 10 குழந்தைகளை பெற்று அவர்களை நல்ல முறையில் வளர்த்துவிட்டு பின்னர் மற்ற இந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றெடுக்க வலியுறுத்தட்டும்" காட்டமாகவே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது "பகவத் எப்பொழுதும் மதத்தை குறிவைத்தே பேசி வருகிறார். அவரிடமிருந்து இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? சமூகத்தை பிளவுபடுத்தும் விதமான கருத்துக்களையே அவர் வெளியிட்டு வருகிறார். வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பற்றி பேசினால் வரவேற்கலாம், ஆனால் அவற்றைப்பற்றியெல்லாம் அவர் வாய் திறப்பதில்லை." என தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறும்போது "பகவத் எல்லா இந்துக்களையும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளச்சொல்கிறார்.  நான் அவரை பார்த்து ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறச்சொல்கிறீர்கள், அப்படியானால் மோடியின் மத்திய அரசிடம் எடுத்துச்சொல்லி அக்குழந்தைகளுக்கு பொறுப்பேர்க்க சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic