ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி சிந்துவின் முகத்தில் காரி துப்பினால் உங்களால் என்ன செய்ய முடியும் என பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சனல் குமார் சசிதரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு போட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள பி.வி சிந்து நாட்டிற்கே பெருமை தேடி தந்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளி வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்ற சிந்துவிற்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மலையாள திரைப்பட இயக்குனர் சனல் குமார் சசிதரன், இடதுசாரி சிந்தனையாளரான இவர் சிறந்த இயக்குனருக்கான விருதை கடந்த 2014 ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார். ஒலிம்பிக் போட்டிகளி அடுத்தடுத்து வெற்றி பெற்று சிந்து முன்னேறிக்கொண்டிருந்த போது ஊடகங்கள் அனைத்தும் இதில் அதிக கவனம் செலுத்தி செய்தி வெளியிட்டு வந்தது. சிந்து ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றதும் நாடே சந்தோஷத்தில் மூழ்கியது.
சிலர் பி.வி சிந்துவின் ஜாதி என்ன என்பதை அறிய கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கினாலும், மலையாள இயக்குனரின் பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனல் குமார் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில் "இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது? மக்கள் ஏன் இதை பெரிதாக எடுத்துக்கொண்டு கொண்டாடி வருகிறார்கள்? பி.வி சிந்து முகத்தில் நான் எச்சில் துப்பினால் என்ன செய்வார்கள்? என குறிப்பிட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சமூக வலைதள விமர்சகரான வில்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெண்கலம் வென்ற சாக்ஷி தொடர்பாக கூறும்போது "இது விளையாட்டில் வெறித்தனம் இருப்பதையே காட்டுகிறது. மூக்கே இல்லாத மக்களுக்கு அரை மூக்கு கொண்டவன் ராஜாவாம் (மலையாளிகள் அதிகம் உபயோகப்படுத்தும் வாக்கியம்) என்பது போல வெறும் 2 கோடி மக்கள் கொண்ட நாட்டின் வீரர்கள் தங்கப்பதக்கங்களை அள்ளிக்கொண்டு போக 130 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றதற்காக தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். மாடுகளை வணங்குபவர்களுக்கும், அதன் கோமியத்தை குடிப்பவர்களுக்கும் ஒலிம்பிக்கில் என்ன வேலை இருக்கிறது? இந்தியாவில் பிறந்ததற்காக வேதனைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்ப பின்னர் அதனை நீக்கியிருக்கிறார்.

No comments:
Write comments