Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 22, 2016

திமுகவினரை நீக்குவதை தவிர வேறு வழி தெரியவில்லை - சபாநாயகர் தனபால்


தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினரை வேறு வழியே இல்லாததால்தான் இடை நீக்கம் செய்ததாக அவைத் தலைவர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, திமுகவினரை இடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறுமாறு திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு மிகக் காட்டமாக விளக்கம் அளித்தார் தனபால். அதாவது, திமுகவினர் என்னைப் பற்றி அவைக்கு வெளியில் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வராமல் என்னைப் பற்றி பத்திரிகைகளில் அவதூறான கருத்துக்களை எழுதுகிறார்.

ஆனால், என்னைப் பற்றி எவ்வளவு தான் நீங்கள் பேசினாலும் பொருட்படுத்தப் போவதில்லை.

நான் வேறு வழியே இல்லாமல் தான் திமுகவினரை இடை நுக்கம் செய்தேன். அவையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை மாற்றிக் கொள்ளுமாறு, திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்தேன். கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கையும் விடுத்தேன். தினம் தினம் அவையில் வந்து என்னை நோகடித்த காரணத்தினாலேயே அவர்களை அவை நடவடிக்கையில் இருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டேன்.

சட்டப்பேரவை விதிகளின் படி பேரவையை ஒழுங்காக நடத்துவேன். எனவே அவரகளை இடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும் எண்ணமே இல்லை என்று அவைத் தலைவர் தனபால் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic