மாட்டிறைச்சி விவகாரகமே மூன்றாம் உலகப்போர் துவங்க காரணமாக அமையலாம் என மத்திய பிரதேசத்தைச்சேர்ந்த சுவாமி அகிலேஷ்வர் ஆனந்த் கிரி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் "கவுபாலன் இவாம் பசுதன் சம்வர்தன்" நிர்வாகத்தின் தலைவராக இருப்பவர் சுவாமி அகிலேஷ்வரானந்த கிரி. 61 வயதான இவர் கடந்த 2010ஆம் ஆண்டு 'மகாமந்தலேஷ்வர்' என்ற விருதை பெற்றவர். மத்திய பிரதேசத்தில் பசுவை பாதுகாப்பதற்காக ஒரு காப்பகத்தையே நடத்தி வருபவர். காவி உடை, கழுத்தில் ருத்திராட்ச மாலை என முழு சாமியாரகவே தோற்றமளிக்கும் இவர் மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது 'மாட்டிறைச்சி விவகாரத்தை முன்வைத்தே மூன்றாம் உலகப்போர் துவங்கப்படலாம்' என தெரிவித்துள்ளார்.
1857ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் சுதந்திரப்போர் துவங்கப்பட்டபோது, அதன் பின்னால் மாட்டிறைச்சி விவகாரம் இருந்தது என்பதை உங்களுகு நினைவூட்டுகிறேன். பசுவை தெய்வமாக மதிக்கிறவர்கள் அது உயிருடனோ அல்லது அதை சாகடித்தோ வண்டியில் கொண்டு செல்லப்படுவதை பார்க்கும்போது அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். அதன் காரணமாகவே ஆங்காங்கே சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடுகிறது. பசுவை பாதுகாப்பதற்காக அமைப்பு நடத்துகிறவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக்கூடாது. அவ்வாறு பசு துன்புறுத்தப்படுவதை கண்டால் உடனே அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வரும்வரை காத்திருக்க வேண்டும். எல்லா மாநிலங்களும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேன்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பசுவை பாதுகாப்பதற்காக தான் ஒரு பண்ணை நடத்தி வருவதாகவும், அதனை பராமரிப்பதற்கு ரூபாய் 100 கோடி தேவைப்படுகிறது எனவும், இதுவரை 18 கோடி கிடைத்துவிட்டதாகவும், மீதம் தேவையான பணத்தை அரசும், மத்திய பிரதேசத்தின் எல்லா எம்.எல்.ஏக்களும் இணைந்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 'பஞ்சகாவ்யா' (பசுவின் கோமியம், பால், தயிர், சாணம், மோர்) உள்ளிட்டவைகளிலிருந்து நோய் நீக்குவதற்கான என்னென்ன மருந்துகளை தயாரிக்கலாம் என்பதை அரசு ஆராய்ச்சி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இவனுங்க அக்கப்போருக்கு அளவே இல்லாம போச்சு...
ReplyDelete