Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 25, 2016

மோடி ஆட்சியில் மதக்கலவரங்கள் வெகுவாக குறைந்துள்ளது - மத்திய அமைச்சர்



பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், நாட்டில் மதக் கலவரங்களின் எண்ணிக்கை 200% குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, பிவண்டி(மகாராஷ்டிரா), மீரட்(உ.பி.,) ஆகிய பகுதிகளில் முன்பு நேரிட்ட கலவரங்களில் 10 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். தற்போது அதுபோன்ற மிகப்பெரிய கலவரங்கள் நாட்டில் ஏற்படவில்லை. கடந்தாண்டு உ.பி., மாநிலம் தாத்ரியில் முஸ்லீம் மதப் பெரியவர் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது. ஆனால், இச்சம்பவம் மதக் கலவரம் கிடையாது. இதுபோன்ற சில சம்பவங்களைத் தவிர்த்து, சிறுபான்மையினர் பார்வையில் மோடி அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.


தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் அறிக்கையின்படி, கடந்த 2 ஆண்டுகளில் மதக் கலவரங்கள் 200 சதவீதம் குறைந்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் மிகப்பெரிய கலவரம் எதுவும் நிகழவில்லை. இதனால் சிறிய சம்பவங்கள் கூட மிகப் பெரிதாக்கப்படுகிறது. சிறுபான்மையினர் சமூகத்திலிருந்து அரசுப் பணிக்கு தேர்வானவர்களின் எண்ணிக்கையும் மோடி ஆட்சியில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic