Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 11, 2016

பஞ்சாப் முதல்வர் பசு காவலர்களுக்கு விடுக்கும் கடும் எச்சரிக்கை


பசுகாவலர்கள் என்ற போர்வையில் விவசாயிகளுக்கும், பண்ணை வியாபாரிகளுக்கும் தொல்லை கொடுப்பதை சகித்துக்கொண்டிருக்க முடியாது. அவ்வாறு செய்பவர்களை எதிர்த்து சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மாட்டிறைச்சி விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் உனா மாவட்டத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து துவங்கி அனுதினமும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் பசுகாவலர்கள் என்று தங்களை கூறுபவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானாவில் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பசு காவலர்கள் என்று சொல்பவர்களில் 80% சமூக விரோதிகள் என குற்றஞ்சாட்டினார். பசுகாவலர்கள் என்று சொல்பவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என கூறியிருந்தார்.

தற்போது இப்பிரச்சனை மாட்டிறைச்சி உண்பவர்களை மட்டுமல்லாது மாடு வைத்திருக்கும் விவசாயிகள், பால் வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் என பலரையும் இந்த பசு காவலர்கள் தொந்தரவு செய்வதாக பஞ்சாப் மாநிலத்தில் புகார் எழுந்துள்ளது. இதனால் 2500 கோடி மாட்டுத்தீவன வியாபார வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பால் உற்பத்திக்காக வெளி மாநிலங்களுக்கு பசுக்களை கொண்டு செல்பவர்களைகூட வழிமறித்து முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஹோசியாப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறும்போது "பசு பாதுகாப்பு போர்வையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள். மாட்டுப்பண்ணை நடத்துபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதே சமயம் கால் நடைகளை வெளி மாநிலங்களுக்கு எடுத்துச்செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் " என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic