Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 11, 2016

ராம்குமாரை வைத்து வீடியோ எடுக்க காவல்துறையினருக்கு அனுமதி


சுவாதி கொலையாளியின் வீடியோ பதிவுடன் ஒப்பிட்டு பார்க்க ராம்குமாரின் மாதிரி வீடியோவை பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராம்குமாரை வைத்து எடுக்கப்படும் வீடியோ சிறைக்குள் வைத்தே நடக்க வேண்டும் என காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டிருந்தாலும், இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு இழுபறிகளும், சந்தேகங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது..

இந்த வழக்கில் ,எழும்பூர் நீதிமன்றம், சுவாதி கொலையாளி தொடர்பான வீடியோ காட்சியை, ராம்குமாருடன் ஒப்பிட்டுப் பார்க்க, அவர் நடந்து செல்லும் காட்சி போன்ற மாதிரி வீடியோவை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து பதிவு செய்ய போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை  ரத்து செய்யக் கோரி, ராம்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ராம்ராஜ் ஆஜராகி வாதிட்டார். அப்போது, குற்றம்
சாட்டப்பட்ட நபரை சம்பவம் நடந்த இடத்தில் வைத்து மாதிரி வீடியோ காட்சியை பதிவு செய்ய அனுமதிக்க கூடாது. அவ்வாறு உத்தரவிட்ட எழும்பூர் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தல்லி வைத்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறினார். அதில், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து, ராம்குமாரை வீடியோ பதிவு செய்யும்படி எழும்பூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அதற்கு பதிலாக சிறையில் வைத்து ராம்குமாரை வீடியோ பதிவு செய்யும்படி போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic