Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 2, 2016

மானிய சிலிண்டர் விலை உயர்வு - நேற்று முதல் அமலுக்கு வந்தது...!!!


மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1.93 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மானிய சுமையைக் குறைக்கும் பொருட்டு சமீபத்தில் மத்திய அரசு இரண்டாவது முறையாக இந்த விலையேற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த விலை ஏற்றத்துக்கு பிறகு மானிய விலையிலான 14.2 கிலோ சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.423.09 ஆக இருக்கும். இதற்கு முன்பு ரூ.421.16 க்கு எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்தன. இதற்கு முன்பு ஜூலை 1 ஆம் தேதி 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.1.98 உயர்த்தப்பட்டது. ஒரு மாதத்துக்குள் மீண்டும் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசலுக்கான மானிய சுமையிலிருந்து அரசு வெளிவந்த வழியை பின்பற்றி மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு மானிய சுமையிலிருந்து வெளியேற சமீபத்தில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாதம் 2 ரூபாய் அளவில் சமையல் எரிவாயுவுக்கான விலையை உயர்த்துவது என்கிற முடிவை எடுத்துள்ளது.

செய்தி : சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic