Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 2, 2016

ஜெயலலிதா ஆலோசனை படியே ஹிலாரி கிளிண்டர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி - சட்டப்பேரவையில் குன்னூர் எம்.எல்.ஏ


முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதாக அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் சட்டப்பேரவையில் பேசினார்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியகோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் ராமு, அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதற்கு முழுமுதல் காரணம் முதலமைச்சர் என்று குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன்  முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தாகவும், அதன் எதிரொலியே இன்று அமெரிக்க தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் - ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பதாக உலகம் இன்று புகழ்ந்து கொண்டிருப்பதாகவும், இந்த சந்திப்பின் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமை சக்தியை புரிந்து கொண்ட ஹிலாரி கிளிண்டன், முதலமைச்சர் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதாக மகிழ்ச்சியோடு அ.தி.மு.க. உறுப்பினர் ராமு தெரிவித்தார்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic