Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 2, 2016

இனி பார்லே-ஜி பிஸ்கட்டை சுவைக்க முடியாது


நீங்கள் 1980 முன்பு பிறந்தவர்களா...? அப்படியானால் இந்த நிறுவனத்தின் பிஸ்கட்டை நீங்கள் சுவைக்காமல் இருந்திருக்கவே முடியாது. ஆம் இந்திய குழந்தைகளின் மனங்களை வெகுவாக கவர்ந்திழுத்த பார்லே நிறுவனம் 87 ஆண்டுகள் தான் செய்த பணியை நிறந்தரமாக நிறுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே 1929 ஆம் ஆண்டு பார்லே புரொடெக்ட்ஸ் பி.வேட் லிமிடட் சார்பில் முதன் முதலாக இந்த பார்லே-ஜி பிஸ்கட் தொழிற்சாலை துவங்கப்பட்டது. குலுகோஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கிய பார்லே-ஜி பிஸ்கட் வகைகள் இந்த கம்பெனியின் பெயரில் வெளிவந்து கொண்டிருந்தது. இந்த தொழிற்சாலை செயல்பட்டு வந்த மும்பை அருகில் இருக்கும் பார்லே என்ற பெயரைக்கொண்டே இது நிறுவப்பட்டது, அன்று முதல் இப்பகுதியும் பிரபலமாகியது.

நுகர்வோர் கலாச்சாரம், கண்ணைகவரும் பல்வேறு விதமான வெளிநாட்டு பிஸ்கட்டுகளின் வரவால் கடந்த சில ஆண்டுகளாகவே பார்லே-ஜி பிஸ்கட்களின் விற்பனை மந்தமாக இருந்துவந்தது. இதனால் நிறுவனத்தை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து பார்லே நிறுவனம் தனது பார்லே-ஜி பிஸ்கட் உற்பத்தியை நிறுத்தியதோடு நிறுவனத்தின் கதவுகளும் நிரந்தரமாக மூடப்பட்டது.

இருந்தபோதிஉம் பார்லே நிறுவனத்திற்கு ஏகப்பட்ட இன்னபிற தொழிற்சாலைகள் ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தின் சார்பாக மற்ற தயாரிப்பு பொருட்களான ஃப்ரூட்டி ஜூஸ், போர்பன் பிஸ்கட் போன்றவை இன்னமும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. பார்லே ஜி பிஸ்கட்களை சுவைத்த பலரும் தங்களது இனிமையான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த நிறுவனத்தின் மூடுவிழாவும் பெரிய அளவில் செய்தியாக்கப்பட்டு வருகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic