Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 7, 2016

பஞ்சுவாலிட்டி தெரியாத பரதேசி அமைச்சர்கள்



சிவகங்கை மற்று இராமநாதபுரத்தில் பொதுமக்களிடம் மனுவாங்கும் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் அங்கு கூடியிருந்தவர்கள் பசி மற்றும் மயக்கத்தால் கீழே விழுந்தனர்.

சிவகங்கையில் தமிழக கதர் மற்றும் கிராம தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் பொதுமக்களிடத்தில் மனு வாங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்திருந்ததால் எப்படியாவது தங்களுடைய குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அமைச்சரை சந்திக்க காலை 8 மணி முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மக்கள் கூட துவங்கிவிட்டனர். ஆனால் 11 மணி வரை அமைச்சர் வரவே இல்லை. வெயிலின் தாக்கம் ஒரு பக்கம், மறு பக்கம் அமைச்சர் வருகையில் தாமதால், இதனால் துவண்டு போயிருந்தனர் ஓட்டுப்போட்ட இழிச்சவாயன்கள். இறுதியாக பஞ்சுவாலிட்டு கால்கிலோ எவ்வளவு? என்று கேட்கும் அளவில் அஸால்டாக எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் 11:30 மணிக்கு வந்திருக்கிறார் அமைச்சர் பாஸ்கரன்.

ஐயோ பாவம்! வெயிலில் 3:30 மணி நேரம் காத்து கடந்த மூதாட்டி ஒருவரு சுருண்டு கீழே விழுந்தார். அவரை அங்குள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

அதேபோன்று ராமநாதபுரத்திலும் கூட்டுறவு வங்கி மூலம் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக அறிவித்தது. இதிலும் அமைச்சர் மணிகண்டன் பங்கு கொள்வார் என கூறப்பட்டது. பகல் 1 மணிக்கு நடைபெறும் என்று சொல்லப்பட்டாலும், மதியம் 3 மணி வரையிலும் அமைச்சர் வரவேயில்லை. பசி மயக்கத்தில் இருந்த பெண்கள் உணவு சாப்பிடலாம் என வெளியே செல்ல முயற்சித்த போது "அமைச்சர் இப்ப வந்திருவார். கொஞ்சம் பொறுத்துக்கங்க" என சொல்லி சாப்பிடக்கூட விடாமல் தடுத்துள்ளனர்.  ஆடி அசைந்து தேர் போல 3:45 மணிக்கு வந்திருக்கிறார் அமைச்சர்.

இவனுங்களுக்கு ஓட்டு போட்ட குற்றத்திற்காக நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என மக்கள் சலித்துக்கொண்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic