Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 7, 2016

சந்திசிரிக்குதுடா பங்காளி! எப்படியாவது காப்பாத்து!

குஜராத்தில் படேல் சமூகம் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டம், மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித் இளைஞர்கள் மீதான கொடூர தாக்குதல் போன்ற காரணத்திற்காக குஜராத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வந்தது.

எம்மாடியோவ்! ஆள விடுங்கடா சாமி என்கிற கதையாக தப்பித்தோம் பிழைத்தோம் என முதலமைச்சர் ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து முதலமைச்சர் பதவியில் யாரை அமர்த்தலாம் என பா.ஜ.க தேசிய நிர்வாகம் கடந்த ஒரு வாரமாக மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தது. 2014க்கு முன் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது அடுத்த பவர்ஃபுல் மேனாக இருந்தவர் அமித் ஷா, 2014 தேர்தலில் ஏற்பட்ட மாற்றம் நரேந்திட மோடி பிரதமராக, கட்சித்தலைவரக இருந்த ராஜ்னாத்சிங் மத்திய அமைச்சராக மாற, காலியாக இருந்த கட்சி தேசியத்தலைவர் பதவியில் வந்து அமர்ந்தார் அமித்ஷா.

இரண்டு வருடமாக தேசிய தலைவர் பதவியை அனுபவித்து வரும் அமித்ஷாவை மீண்டும் குஜராத் பக்கம் துரத்தி விட சில கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டதாக தெரிகிறது. குஜராத் முதல்வர் பதவியை விட கட்சியின் தேசிய தலைவர் பதவியே பவர்ஃபுல் ஆனது என்பதை நன்கு உணர்ந்த சொட்டைத்தலையன் அமித்ஷா உஷாராகி தன் பதவியை தக்க வைத்துக்கொண்டு, தனது சிஷ்யனான விஜய் ரூபானியை பலிகாடாவாக ஆக்கினார். தமக்கு பெரிய லக் அடித்துவிட்டது என்பதாக நினைத்துக்கொண்டு கழுத்தில் கத்தி வைக்கப்பட்டிருப்பதை கூட அறியாமல் விஜய் ரூபாணி முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். குஜராத் வளர்ச்சி பெற்று கொண்டிருக்கிறது என்கிற கதை போய், அம்மாநிலத்தில் பா.ஜ.க செருப்படி வாங்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அடுத்த வருடம் நடக்கப்போகின்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க படாத பாடு பட்டு வருகிறதாக தகவல்.

விஜய் ரூபானி முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட கையோடு குருஜி மோடியை சந்தித்திருக்கிறார். மோடியும் பங்காள்! நம்ம நிலமை நம்ம ஊர்ல சந்தி சிரிக்குதுடா! எப்படியாவது நீ தான் தூக்கி நிறுத்தனும்னு! சொல்லியிருக்காரு மோடி. ஆலோசனை கேட்க சென்ற விஜய் ரூபானிக்கு பெருத்த ஏமாற்றமாக போய்விட்டது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஆனந்திபென் படேல் தனக்கு பிறகு தம் சமூகத்தைச்சேர்ந்த நிதின் படேலே முதலமைச்சராக வர வேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால் அவரை துணை முதலமைச்சராக நியமித்திருக்கிறது பா.ஜ.க. இதனால் கடுப்பாகிப்போன ஆனந்திபென் ஆட்சி அமைக்க கோரி விஜய் ரூபாணி ஆளுனரை சந்திக்க சென்ற போது கூட செல்லவில்லையாம். மேலும் கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic