Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 7, 2016

தமிழன் விசயத்தில் மட்டும் வாயால் வடை சுடும் அரசியல்வாதிகள்...



கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையின் மீண்டும் விரட்டி அடித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்துக்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டி அடித்தனர். மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து வலைகளையும் அறுத்தெறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

உயிருக்கு பயந்து வேறு வழியின்றி கரைக்கு பத்திரமாக திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழக மீனவர்களுக்கான பிரச்சனை காலம் காலமாக தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனைக்கு விடிவுகாண மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் ஓட்டுக்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். ' நான் ஒரு இழிச்சவாயன்' என தன்னுடைய நெற்றியிலேயே தமிழன் எழுதி வைத்திருக்கிறான் போல, அதனால் தான் ஒரு கூத்தாடி தேர்தல் பிரச்சாரத்தில் போது "அம்மா மட்டும் முதலமைச்சராகிவிட்டால், நீங்கள் படகில் அல்ல, ஹெலிகாப்டரில் போய் மீன் பிடிக்கலாம்" என்று சொன்னபோதும் சரி, தமிழகத்தில் விபச்சார பத்திர்கையாக செயல்பட்டு வரும் 'தினமல(ம்)ர்' பத்திரிகை 'மோடியை கண்டு மிரண்ட ராஜபக்சே' என கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டபோதும் வேடிக்கை பார்த்து கை தட்டி சிரித்துக்கொண்டிருந்தான் அப்பாவி தமிழன்.

ராஜபக்சேவையே மீரள வைத்த நமது கைப்புள்ள மோடி, ராஜபக்சேவுடன் இருந்த சில்லறப்பயல ஸ்ரீசேனாக்கு ஒரு போன் போட்டு என்னடா? உங்க ஆளுங்க ரொம்ப திமிர நடந்துக்கிறாங்க? ஒழுங்க இருக்க முடியாதா? என ஒரு போன் போட்டு கேட்கமுடியாதா? பாதிக்கப்பட்டவன் தமிழன், செத்தவன் தமிழன் என்று வரும்போது அவ்வளவு ஆட்சியாளர்களுடைய காதுகளும் செவுடாய் போய்விடுகிறது. எப்பதான் இந்த போலி அரசியல்வாதிகள் தமிழன் விசயத்தில் 'வாயால் வடை சுடும்' வித்தையை நிறுத்தப்போகிறார்களோ தெரியவில்லை...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic