Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

மாட்டிறைச்சி விவகாரம் உயிர் பயத்தில் இஸ்லாமிய பெண்


மத்தியபிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கருதப்பட்டு மாண்டசர் இரயில்வே நிலையத்டில் வைத்து தாக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் மத்தியபிரதேசம் மாண்டசர் இரயில்வே நிலையத்தில் இரண்டு இஸ்லாமிய பெண்களை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. இரயில்வே துறை காவலாளிகள் வந்தபின்னரும் அந்த கும்பல் தொடர்ந்து அவ்விருபெண்களையும் கடுமையாக தாக்கினர். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அவர்கள் இருவரும் தாக்கப்பட்டிருக்கின்றனர். இறுதியில் அது எருதுவின் மாமிசம் என தெரியவந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு ஆளான பெண்களில் ஒருவருக்கு கையில் எழும்பு முறிவும் ஏற்பட்டது.

தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று வரும் அவர்களுக்கு கொலை மிரட்டல் கொடுக்கப்பட்டு வருவதாக மத்திய பிரதேச மாநில எஸ்.டி.பி கட்சி தலைவர் சாஜித் சித்தீகி செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இருவரையும் பெண்கள் கமிஷன், மனித உரிமை கமிஷன், சிறுபான்மை கமிஷன் ஆகிய கமிஷன்களின் அதிகாரிகளிடம் அழைத்துச்சென்று புகார் கொடுத்தோம். அவர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து பெரும் பதடத்தோடு இருக்கின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க காவல்துறையினருக்கு கமிஷன்கள் மூலம் நோட்டீஸ் அனுபப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. சுதந்திர தினம் நெருங்குவதால் பணிச்சுமை காரணமாக பதில் அனுப்பாமல் இருந்திருக்கலாம். எனினும் ஆகஸ்ட் 15ற்கு பிறகு தொடர்ந்து கேட்டு வருவோம் என சித்தீகி தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic