Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

ஒத்த ஆளாய் நின்று போராடும் டிராபிக் ராமசாமி!


சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த ஆய்வு செய்வதாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் இன்று விளக்குத்தூண் பகுதியில் அரசு அனுமதி பெற்று வைக்கப்பட்ட விளம்பர போர்டுகளை உடனடியாக அகற்றுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அங்கிருந்த விளக்குத் தூண் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் அனுமதி பெற்று வைக்கப்பட்டு இருக்கும் விளம்பர போர்டுகளை அகற்ற எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசிய டிராபிக் ராமசாமி, உச்சநீதிமன்றத்தில் டிஜிட்டல் போர்டுகள் வைக்க தடை இருக்கும் போது எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த கலெக்டர், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வில்லை என்றும், மாநகராட்சி அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.

இதன்பிறகு மாநகராட்சி அதிகாரியிடம் போனில் பேசிய டிராபிக் ராமசாமி, மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அதிகாரி விளம்பர போர்டு வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது என்றும் அதை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து உடனடியாக ஜே.சி.பி. வாகனத்துடன் வந்த மாநகராட்சி ஊழியர்கள் விளக்குத்தூண் பகுதியில் இருந்த 2 விளம்பர போர்டுகளையும் அகற்றினார்கள்.

இந்த பணிகளை தனது காமிராவில் வீடியோ காட்சியாக பதிவு செய்த டிராபிக் ராமசாமி இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் விளக்குத் தூண் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic